கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நேற்று தொடங்கிய கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கியது.
யானைகள் புத்துணர்வு முகாமை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், பாகன்கள் தங்குமிடம், ஓய்வு அறை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post