அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைந்துள்ளது. பல்வேறு அமைப்பினரும் கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளன தலைவர் சி.எம்.கே.ரெட்டி மற்றும் பொதுச் செயலாளர் நந்தகோபால் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அதிமுக கூட்டணிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர். தெலுங்கு மக்களுக்காக நலத் திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சருக்கு அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர் .
Discussion about this post