தெலங்கானாவில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துமாறு, மாநில அரசையும் தொழிற்சங்கங்களையும் தெலங்கானா உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 12ஆவது நாளாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு வராத தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேரைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாகவும், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் அரசும் தொழிற்சங்கங்களும் பேச்சு நடத்த வேண்டும் எனத் தெலங்கானா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post