ஜெர்மன் குடியுரிமை பெற்ற தெலங்கானா ராஷ்டிர சமிதி சட்டமன்ற உறுப்பினரின் குடியுரிமையை மத்திய அரசு பறித்துள்ளது.
வேமூலவாடா தொகுதியில் தெலங்கானா ராஷ்டிர சமிதி சார்பில் போட்டியிட்டுச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சென்னமனேனி ரமேஷ். 1990ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வேலைக்குச் சென்ற இவர் 1993ஆம் ஆண்டில் அந்நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிய அவர் குடியுரிமை கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. குடியுரிமை விதிமுறைப்படி இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கு முன் வெளிநாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருக்கக் கூடாது. இந்நிலையில் சென்னமனேனி ரமேஷ் ஜெர்மன் பாஸ்போர்ட் வைத்துள்ளதாகக் கூறி ஆதி ஸ்ரீனிவாஸ் என்பவர் உள்துறை அமைச்சகத்துக்குப் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரமேசின் இந்தியக் குடியுரிமையை மத்திய அரசு பறித்துள்ளது.
Discussion about this post