காஞ்சிபுரத்தில் 43வது நாளாக காட்சி அளிக்கும் அத்திவரதரை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் ஆதி அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 43வது நாளான இன்று அத்தி வரதர் வைபவத்தையொட்டி தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தானர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் வசந்த மண்டபத்தில் உள்ள ஆதி அத்தி வரதரை சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவருக்கு பட்டாச்சாரியார்கள் மரியாதை செலுத்தினர். உடன் ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் கட்சி எம்.எல்.ஏ ரோஜாவும் சுவாமி தரிசனம் செய்தார்.
Discussion about this post