பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நான்கு போட்டிகளில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இதையடுத்து பரபரப்பான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. பாகிஸ்தானின் தொடக்க வீரர் பகார் ஸமான் அதிகபட்சமாக 70 விளாசினார். இமத் வாசிம் 47 ரன்களும், கேப்டன் சோயப் மாலிக் 31 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 240 ரன்கள் எடுத்தது.
241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின்தொடக்க வீரர்கள் டி காக், ஆம்லா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஆம்லா 17 ரன்னிலும், ஹென்றிக்ஸ் 33 ரன்கலும் ஆட்டம் இழந்தனர். அதிரடியாக விளையாடிய டி காக் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டன் டூ பிளிசஸ் , டாசென் ஆகியோர் நிதானமாக விளையாடி இருவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இதனால் 40 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி இலக்கை தென் ஆப்ரிக்கா அணி எட்டியது. தொடரை 3- 2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது
Discussion about this post