நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இந்திய கேப்டன் கோலி 2-வது இடத்திலும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
பந்து வீச்சில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், 2-வது இடத்தில் நெயில் வாக்னர் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர் பிரிவில், மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் முதலிடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 2-வது இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
அணிகளின் தரவரிசையில், இந்திய அணி 3 புள்ளிகளை இழந்து 116 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூஸிலாந்து 110 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Discussion about this post