பணியில் சேராத ஆசிரியர் பணியிடங்களை காலி இடமாக கருதி கணக்கெடுத்து கல்வி அதிகாரிகள், அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதுவரை பணிக்கு செல்லாத, பணிக்கு செல்வதை உறுதி செய்யாத ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவர்கள் கூறும் பள்ளியில் பணியாற்றலாம் என்றும் கூறியுள்ளது.
பணிக்கு செல்லாத ஆசிரியர்களுக்கான கெடு முடிந்து விட்டதால், பணியில் சேராத ஆசிரியப் பணியிடங்களை காலி இடமாக கருதி, கணக்கெடுத்து கல்வி அதிகாரிகள், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி செல்வதை உறுதி செய்யாத ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகள் விதி 17B-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்று முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களின் முன் அனுமதியினை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆயிரத்து 584 ஆசிரியர்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post