நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சேவைகளில் முன்னுரிமை அளிக்கவும், பரிசு வழங்கி பாராட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கவும் மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்டத்தை மத்திய நேரடி வரிகள் ஆணையம் தயாரித்துள்ளது. அதன்படி, நேர்மையாக வரி செலுத்துவோருக்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள், பாஸ்போர்ட் அலுவலகங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.அரசு விழாக்களில் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.
தற்போது நாடு முழுவதும் 8 கோடி பேர் வருமான வரி செலுத்துகின்றனர். அடுத்த ஆண்டு மார்சுக்குள் கூடுதலாக ஒன்றே கால் கோடி பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இணைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்கும் பரிந்துரைகளுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்ததும், மத்திய அரசு செயல்படுத்தும்.
Discussion about this post