ஜெட் ஏர்வேஸ் குழுமத்தின் தலைவராக நரேஸ் கோயல் உள்ளார். நிதி நெருக்கடி காரணமாக விமானிகளுக்கான ஊதியத்தை வழங்குவதிலும் பிற நிலுவை தொகைகளை செலுத்துவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸின் பங்குகளில் சிலவற்றை விற்பனை செய்ய நரேஸ் கோயல் முடிவு செய்துள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க டாடா குழுமம் முயற்சி செய்து வருகிறது. தற்போது நரேஸ் கோயலிடம் இருக்கும் 51 சதவீத பங்குகளில் 26 சதவீத பங்குகளை டாடா குழுமம் வாங்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஜெட் ஏர்வேஸை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை யார் வைத்திருப்பது என்ற விவகாரத்தில் சிக்கல் நீடிக்கிறது.
Discussion about this post