கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பள்ளி திறக்கும் முதல் நாளில், மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 83 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பள்ளிகளில் பயின்று வரும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுன்றன.
Discussion about this post