வங்கதேசத்திற்கு எதிரான உலககோப்பை லீக் போட்டியில், இந்திய அணி 315 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் 40 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும், கே.எல். ராகுலும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
ரோகித் ஷர்மா 104 எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல் ராகுலும் தனது பங்கிற்கு சிறப்பாக ஆடி அரை சதத்தை கடந்தார். அவர் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.
Discussion about this post