வணிக வரித்துறை சிறப்பாக செயல்பட்டமைக்கு நல் ஆளுமை விருது சுதந்திர தின விழாவில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு நாட்டில் அதிக வரி வருவாய் ஈட்டக்கூடிய மாநிங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாகவும், விரைவில் தேசிய விருதை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post