அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை முகாம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை முகாமை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
நாளை விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் நாளை மாணவர் சேர்க்கை முகாம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி வகுப்புகளில் புதிதாக சேரும் மாணவர்களும், இடையில் நின்ற மாணவர்கள் வேறு பள்ளியில் சேருவதற்காகவும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதேபோன்று, மறுதேர்வு மாணவர்களுக்கும் இந்த புதிய நடைமுறை பயனுள்ளதாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.