மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு சதவீதத்தை உயர்த்தி வழங்கி மாற்றுத்திறனாளிகளின் நலம் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் சமூக வலுவூட்டல் என்ற தலைப்பில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் சார்பாக மாற்றுத்திறனாளிக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் 2 ஆயிரத்து 414 பேருக்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம், தமிழக அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சதவீதத்தை 4 சதவீதமாக உயர்த்தி மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் உட்பட அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
Discussion about this post