தமிழக அரசின் அறிவிப்பின் படி, வரும் 10ம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன்கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர இதர கடைகள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாது என்பது தமிழக அரசின் அறிவிப்பாகும். அனைத்து உணவகங்களிலும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் விடுதிகளில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உள் அரங்குகள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு ,கல்வி, பொழுதுபோக்கு, கலச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் முடிதிருத்தும் நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்:
மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன்கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழ்நாடு அரசு
அனைத்து உணவகங்களிலும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணிவரை மட்டுமே செயல்படலாம்
விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்
வணிக மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் விடுதிகளில் தங்க அனுமதி
உள் அரங்குகள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை
அழகு நிலையங்கள் முடிதிருத்தும் நிலையங்கள் இயங்கத் தடை – தமிழ்நாடு அரசு))