தமிழ்நாட்டில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காததால், 70 சதவீதம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால், அதிகப்படியான கொரோனா நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால், போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் 70 சதவீத கொரோனா நோயாளிகள் இறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவம் கிடைக்காததால், அதிகப்படியான இறப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ஒற்றை இலக்க ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.