கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த 11ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது, தடுப்பூசி செலுத்த நடமாடும் தடுப்பூசி வாகனங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது வரை புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றார். புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள அவர், கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
Discussion about this post