அதிபர் அதிகார முறைமையை ரத்து செய்வதற்கான 20வது சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியை ஆதரிப்பதற்கான முழு விருப்பத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பத்தரமுல்லாவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன், இலங்கையின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அதிபர் அதிகார முறைமையை ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவிக்கும் 20வது திருத்த சட்டமூலத்தை ஆதரிப்பதற்கான முழு விருப்பத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதிபர் அதிகார முறையை ரத்து செய்வது குறித்து அனைத்து கட்சிகளிடமும் மக்கள் விடுதலை முன்னணி கட்சி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post