இந்தியாவில் அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழக மின்சாரத்துறை 2017 -18 ஆண்டில் புதுப்பிக்கதக்க ஆதாரங்களின் மூலம்16.2 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் தயாரித்து இந்தியாவிலேயே அதிக மின்சாரம் தயாரித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
13.5 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் தயாரித்து கர்நாடகா மாநிலம் 2வது இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் 12 பில்லியன் யூனிட்கள் மின்சாரம் தயாரித்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன. பஞ்சாப் மாநிலம் 2.3 பில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்து 10வது இடத்தை பிடித்துள்ளது.
Discussion about this post