தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகளும், ஊரக வளர்ச்சித் திட்டத்துக்காக மேலும் 4 தேசிய விருதுகளும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சமவெளிப் பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. நீர்ச் சேமிப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் 15ஆம் இடத்தைப் பிடித்த வேலூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய காலத்தில் ஊதியத்தை வழங்கியதில் முதலிடம் பிடித்ததற்காகத் திருச்சி மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய காலத்தில் பணி முடித்ததில் இரண்டாமிடம் பெற்ற கரூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.
Discussion about this post