உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்பு தானத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொது அலுவலக வளாகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டி நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இருக்கும் போது ரத்த தானமும் மறைந்த பிறகு உடல் உறுப்பு தானமும் அவசியம் என்று வலியுறுத்திய அவர், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம், நான்காவது இடத்தில் இருப்பதோடு மருத்துவ துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.

Exit mobile version