ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், தேசிய அளவில் சிறந்த 5 மாநிலங்களில், தமிழ்நாடு 3ஆம் இடம் பிடித்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசின் கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், மாநிலங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதன்படி, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், தமிழ்நாடு மூன்றாம் இடம் பிடித்துள்ளது. குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்த தகவலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய அளவில் ஆட்டோ மொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 46 சதவீதமாகவும், ஆடைகள் மற்றும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும் உள்ளது. மேலும், தமிழ்நாடு தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post