தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த 24மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post