பரமத்தி வேலூரில் நடைபெற்ற தமிழக அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு 2019 ஆணழகன் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சூர்யா ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மாவட்ட ஆணழகன் சங்கத்துடன் இணைந்து மிஸ்டர் தமிழ்நாடு 2019ம் ஆண்டிற்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 40 வயது பிரிவில் முதல் பரிசை சென்னையை சேர்ந்த ராஜேந்திரனும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதல் பரிசை சேலத்தைச் சேர்ந்த தங்கதுரையும் பெற்றனர். இறுதியில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு 2019 ஆணழகனுக்கான போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சூர்யா தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ரொக்கம் 50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
Discussion about this post