நாட்டிலேயே அதிக மக்கள் மருத்துவ காப்பீட்டை பெற்ற மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாராட்டி உள்ளார்.
தமிழகத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய சுகாராத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழகத்தில் ஏற்கெனவே அம்மா காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்திருப்பதன் மூலம் நாட்டிலேயே அதிக மக்கள் மருத்துவ காப்பீட்டை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post