ஊரகத் தூய்மையில் இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு

தூய்மை பாரத திட்டத்தில், சிறப்பாகச் செயல்பட்ட தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வழங்கிய விருதை, முதலமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.

ஊரக தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதைப் பிரதமர் மோடியிடம் இருந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார். பிரதமர் மோடி வழங்கிய விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.

Exit mobile version