புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் சூரிய ஆற்றல் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது நாடாக உள்ளது. மேலும், காற்று, சூரிய ஆற்றல் போன்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களை நோக்கி மத்திய அரசு வேகமாக அடியெடுத்து வைத்து வருகிறது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதில், 100 ஜிகாவாட் சூரிய ஆற்றல் உற்பத்தி, 60 ஜிகாவாட் காற்று உற்பத்தி, 10 ஜிகாவாட் எரிசக்தி உற்பத்தி அடங்கும்.
இந்தியாவில் 2 ஆயிரத்து 700 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் சூரிய ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்கள் முன்னோடியாக உள்ளன.
சூரிய ஆற்றல் உற்பத்தியில் கர்நாடகா 6 ஆயிரத்து 300 மெகாவாட்டுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் 3 ஆயிரத்து 575 மெகாவாட்டுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 621 மெகாவாட் அளவுக்கு சூரிய ஆற்றல் உற்பத்தியாகிறது.
காற்று மூலம் மின்சாரம் தயாரிப்பில் குஜராத் 2 ஆயிரத்து 852 மெகவாட்டுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு ஆயிரத்து 567 மெகவாட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
Discussion about this post