மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க, அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்த அவர், ரயில்வே துறையில் தினமும் 20 சரக்கு ரயில் பெட்டிகள் அளவிற்கு நிலக்கரி வழங்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், வடசென்னை, உப்பூர் ஆகிய இரு அனல்மின் திட்டங்களின் பயன்பாட்டுக்காக, 5 புள்ளி 913 மில்லியன் டன் நிலக்கரி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடன்குடி எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு ஆண்டொன்றுக்கு 9 புள்ளி 214 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து, அமைச்சர் தங்கமணி பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
Discussion about this post