சாலை பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசு

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பில் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இந்த நிலையில், விபத்துகள் குறைந்துள்ளதா என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு வாரம் பிப்ரவரி 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஒரு வாரத்தில், பல்வேறு வகையான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளை, தமிழக போக்குவரத்து காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன், அரசு, புதிய தொழில்நுட்பங்களை கையாளும் முயற்சிகளையும் பாராட்டுகின்றனர்.

சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, ஆட்டோ ஓட்டுனர்கள், கார், பேருந்து, லாரி ஓட்டுனர்கள், கல்லூரி மாணவர்களுக்கும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக போக்குவரத்து காவல்துறை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விபத்துக்கள் குறைந்துள்ளதா? தலைகவசம் அணிவதன் அவசியம் பற்றி வாகன ஓட்டிகள் என்ன கூறுகிறார்கள்…கேளுங்கள்…

என்னதான் அரசும் போக்குவரத்து காவல்துறையும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் சாலை விதிகளையும், ஒழுங்கையும் சரியாக கடைபிடித்தால், தமிழகம் விபத்தில்லா மாநிலமாக விரைவில் மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

Exit mobile version