கோவையில், சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கூட உணவு வழங்க முடியாத நிலை திமுக ஆட்சியில் நிலவுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டை போல் தற்போது மருத்துவ முகாம்களோ, வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், கோவை மாவட்டத்தில் அதிமுகவே அதிக தொகுதிகளில் வென்றுள்ளதால், கோவையை மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என சாடினார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு படுக்கை வழங்கிய செயலையும் கோவை செல்வராஜ் கண்டித்தார்.
மேலும் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ரேஷன் கடை உழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பொருட்களை வழங்கவும், சத்துணவு பணியாளர்கள் மூலம் சமைத்து வீடு வீடாகக் கொடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை செல்வராஜ் வலியுறுத்தினார்.
Discussion about this post