வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவதற்காக கூடுதலாக 16 ஆயிரத்து 728 கோடி ரூபாய் நிதி பெற தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிதான வர்த்தகங்களை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் கூடுதல் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 813 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 2 ஆயிரத்து 525 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 4 ஆயிரத்து 509 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசத்திற்கு 2 ஆயிரத்து 373 கோடி ரூபாயும், தெலங்கானாவிற்கு 2 ஆயிரத்து 508 கோடி ரூபாயும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த நிதி வழங்கப்படுவதாக, மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Discussion about this post