பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் கேரள அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி உள்பட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஆனவச்சாலில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னிச்சையாக கட்டுமானப் பணிகளை தொடங்க முயற்சித்து வரும் கேரள அரசைக் கண்டித்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் உத்தமபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக விவசாயிகள் பங்கேற்று கேரள அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
Discussion about this post