தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவை விட தமிழகம் பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்வதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில், உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய ஆளுநர் பன்வரிலால் புரோகித், இனிமையான மொழியான தமிழ் மொழியை மிகவும் நேசிப்பதாக கூறினார். தமிழகம் பன்முகதன்மை வாய்ந்த மனிதவளத்தை கொண்டுள்ளதாகவும் ஆளுநர் பெருமிதம் தெரிவித்தார். தற்போது, தமிழகத்தில் நல்ல தொழில் சூழல் உள்ளதாக கூறிய ஆளுநர், ஆட்டோமொபைல், உட்பட பல துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கப்பதாக தெரிவித்தார்.
ஒற்றை சாளர முறையில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் தெரிவித்தாகவும் ஆளுநர் கூறினார். துபாய், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 37 ஆயிரத்து 300 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவை விட தமிழகம் பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post