ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் ஊரகப்பகுதிகளின் வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் பணிகள் முக்கிய பங்காற்றுக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து விளக்குகிறது இந்ததொகுப்பு…
பொதுமக்களின் வாழ்க்கையை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர், குப்பை மேலாண்மை என்பன போன்ற பலவற்றிற்கும் முக்கியத்தும் அளித்து தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில் கடந்தாண்டு ஒத்துக்கப்பட்ட 35 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்த துறையாக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை விளங்குகிறது. குறிப்பாக ஊரகப்பகுதிகளில் கடந்த இரண்டாண்டுகளில் 46 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து சாலைகளின் தரம் மேற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோமீட்டருக்கு சாலைகள் அமைத்து, சாலைகளின் தரத்தினை மேம்படுத்துவதில் சிறந்த மாநிலமாக தமிழக அரசு விளங்கி வருகிறது
அதே போல அரசின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்குடன் தமிழகத்தில் மொத்தமுள்ள 43 லட்சத்து 61 ஆயிரம் தெரு விளக்குகளில் 23 லட்சத்து 63 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு, இதன் மூலம் 446 கோடி ரூபாய் லாபம் ஈட்டி மின் பயன்பாட்டையும் வெகு அளவில் குறைத்து சாதனை படைத்துள்ளது தமிழக அரசு.
பொதிய மழை இல்லாததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதும், தண்ணீர் பற்றாக்குறை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம், புதிய உத்திகளை கையாண்டு மக்களுக்கு தண்ணீரை வினியோகித்து வருவது அரசின் சாதனைக்கு மற்றுமொரு மைல் கல் ஆகும்.
இது போல நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில் மாநிலத்தை நவீன மயமாக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை விரைவுப்படுத்துதல், நீராதாரத்தை பெருக்க நீர் நிலைகள் புனரமைத்தல், ஏரிகளை மறு சீரமைப்பு செய்தல்,
குப்பைகளை உரமாக மாற்றும் திடக்கழிவு மேலாண்மை, குடிநீரை உறுதி செய்யும் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நடப்பாண்டில் முடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பின்பு துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படவுள்ளன.
Discussion about this post