கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசின் பல்வேறு துறைகள் மூலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் நுகர்வோர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாகவோ, மொபைல் ஆப் மூலமாகவோ மின் கட்டணம் செலுத்தும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க 1912 என்ற இலவச தொலை பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மின் வாரிய அலுவலகங்களையும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post