தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான, 137 வகையான மீட்பு உபகரணங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 7 கோடி மதிப்பிலான வகையான மீட்பு உபகரணங்கள் வாங்கப்பட்டன. குறிப்பாக, பேரிடர் காலங்களில் மக்களை விரைவில் மீட்கும் வகையிலான துளையிடும் கருவிகள், நவீன கட்டர்கள், கையடக்க தீயணைப்பான்கள், சிலிண்டருடன் கூடிய சுவாசக் கருவிகள், ஜெனரேட்டர்களுடன் கூடிய உயர் கோபுர விளக்குகள், நீர் எடுக்கும் இயந்திரங்கள், செயற்கைக்கோள் அலைபேசிகள், உயர் கவசங்கள், காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகுகள் என 137 வகையான மீட்பு உபகரணங்கள் வாங்கப்பட்டன. இந்த பேரிடர் மீட்பு உபகரணங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Discussion about this post