சுகாதாரத்தில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும், மத்திய அரசிடம் அதிக நிதிபெற்ற மாநிலமாகவும் தமிழகம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு மனிதம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலேயா முதன்முறையாக தமிழகத்தில் வெற்றிகரமாக கை-மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான ஒளிப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்தில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும், மத்திய அரசிடம் அதிக நிதிபெற்ற மாநிலமாகவும் தமிழகம் உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசினார். அப்போது, “3 மாதம்கூட முதல்வராக இருக்கமாட்டார் என்று கருதியவர்கள் மத்தியில் 3-வது ஆண்டை நிறைவு செய்ய போகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” என்று தெரிவித்தார்.
Discussion about this post