தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தலைமச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 18ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 23, 24ம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post