மத வழிபாட்டில் உள்ள பாரம்பரிய முறைகளை மாற்றக் கூடாது என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, 5 நாட்களாக பேரணி நடத்த இருப்பதாக கூறினார்.
மத வழிபாட்டில் நெடுங்காலமாக உள்ள பாண்பாடு சார்ந்த வழிமுறையை நிச்சயமாக மாற்றக்கூடாது என்று கேட்டுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், இது பெண்களுக்கான சம உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.
பெண்களுக்கு இந்த தீர்ப்பில் விருப்பமில்லாத நிலையில், கேரள அரசு மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பெட்ரோல் ,டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார்.