சீன வானொலியின் தமிழ் பிரிவு சார்பாக “சீன – இந்திய சந்திப்பு” என்ற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் இருநாட்டு தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். சீன வானொலியின் தமிழ் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழில் பேசி அசத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சீன நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் தமிழ் மொழிக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறினர். இருநாட்டு உறவின் முக்கியம்சங்கள், கலை மற்றும் கலாச்சாரம் உணவு போன்ற கருத்துகளை மேடையில் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய சீன வானொலியின் தமிழ் தொகுப்பாளர் பூங்கோதை, சீன பண்பாட்டிற்கும், தமிழர் பண்பாட்டிற்கும் பல்வேறு பொது அம்சங்கள் உள்ளது என்று கூறினார். தமிழ் கலாச்சாரம் உலகில் சிறந்தது என்று சீன வானொலியின் மற்றொரு தொகுப்பாளர் கூறியுள்ளார்.
Discussion about this post