தமிழகத்தில் தொழில்நுட்பத்துறை முதலிடத்தில் உள்ளதாகவும், பல்வேறு துறைகளில் இந்திய அளவில் முதலிடத்தில் சிறந்து விளங்குவதாகவும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார். தொழில் துவங்க தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளதாக கூறினார். தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளதாக கூறிய அவர், சிறு குறு தொழில் துவங்க 140 பேர் விண்ணப்பித்த நிலையில் உடனடியாக 100 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். தொழிலாளர்களாக இருக்காமல், தொழில் வழங்க கூடியவர்களாக தமிழக மாணவர்கள் வளர வேண்டும் என அமைச்சர் சம்பத் கேட்டுக்கொண்டார். 2வது உலக தொழிலாளர்கள் மாநாடு சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post