அழிந்து வரும் பனைமரத்தை காக்கும் நோக்கத்தில் பாரம்பரியமிக்க பனங்கிழங்கை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி பன கிழங்கு பர்பி தயாரித்து வருகிறார் தமிழாசிரியர் ஒருவர், அவரைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு..
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன் புலத்தில் பாரம்பரியமிக்க பனங்கிழங்கை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி பன கிழங்கு பர்பி தயாரித்து வருகிறார் தமிழாசிரியர் ஒருவர்.
தமிழர்களின் விருந்து உபசரிப்பில் முக்கிய இடம் வகிப்பது பனங்கிழங்கு என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. “கண்டதை உண்டெனினும் கடிதினில் செரித்திட கிழங்கினை உண்டிடு” என்ற கூற்றுதான் இதற்கு முக்கியத்துவம். பனங்கிழங்கு பசியைத் தூண்ட வல்லது, வயது வேறுபாடு இன்றி எல்லோரையும் பாடாய்படுத்தும் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பனகிழங்கை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பள்ளி தமிழாசிரியர் கார்த்திகேயன் முயற்சி எடுத்து வருகிறார் .
தான் தயாரிக்கும் பனங்கிழங்கு பர்பி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கும் வகையில் ஏற்றது என்றும், வழக்கமாக ஒரு பணங்கிழங்கு ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது கூறும் கார்த்தியேயன், பர்பியாக தயார் செய்யும்போது
குறைந்த பட்சம் பணங்கிழங்கு ரூபாய் 3 க்கு மதிப்பு கூட்டப்படுவதாக தெரிவித்தார்.
பனங்கிழங்கின் உள்ள நார்ச் சத்துடன், மாவுச் சத்து போன்றவை இணையும்போது இரும்புச் சத்து கூடுதலாக கிடைக்கிறது உடலுக்கு ஊட்டமும் அளித்து உடல் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்துகின்றது, பணங்கிழங்கு மலச்சிக்கலுக்கு உதவுவதோடு மட்டுமல்லாது உடலில் உள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றுகிறது.
பனையின் பாலிலிருந்து மதிப்பு கூட்டி தயாரிக்கப்பட்ட பொருட்களான பனை வெள்ளம், பனங்கற்கண்டு, பனங்கட்டி ,கருப்பட்டி, பதனி என்ற வரிசையில் இன்று பணங்கிழங்கு பர்பி தயார் செய்யப்படுகிறது.
இந்த பர்பி செய்வதற்கு முதலில் பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து பின்னர் அதை நன்கு உலர வைக்க வேண்டும், உலர்ந்தபின் அதை மாவாக்கி அதனுடன் முந்திரி ஏலக்காய் நெய் மற்றும் வெல்லப் பாகு சேர்த்து சுவையான பர்பி தயாராகிறது.
கார்த்திகேயன் பர்பி மட்டுமல்லாமல் பனங்கிழங்கு அல்வாவும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பன கிழங்கிலிருந்து அதிகம் இனிப்பு, முறுக்கு, கார முறுக்கு, பணியாரம், கேசரி, தோசை என 25 வகையான உணவு பொருட்களை செய்து கின்னஸ் சாதனை படைப்பதே கார்த்திகேயன் இலட்சியம் என்பது குறிப்பிடத்தக்கது..
Discussion about this post