இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அடுத்தகட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு இரு நாடுகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், பல தரப்பு விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக, இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்துவதற்கு இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இருப்பினும் அந்தப் பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
Discussion about this post