நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கேரளா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில செயலாளர்கள் தலைமையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது.

15 ஆண்டுகளுக்குப் பின், கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழகம் மற்றும் கேரளா முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இரு மாநில நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பேச்சுவார்த்தை நடத்த இரு மாநில செயலாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குழுக்களும் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பரம்பிகுளம்- ஆழியாறு திட்டத்திற்கான குழு மற்றும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கான குழுவினர், கேரள அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவினருடன் இன்று சென்னையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்த நிலையில், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி முதல் வாரம் கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version