நாடாளுமன்ற தேர்தலில், நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், சென்னையில் பேசும் பொம்மை மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அண்ணா நகரில் உள்ள பூங்காவில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேசும் பொம்மையை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாம் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என, ஒருவர் கையில் வைத்திருக்கும் பொம்மையை பேச வைப்பது போன்று செய்யப்படும் வென்ட்ரிலாக்விசம் எனப்படும் முறையை கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Discussion about this post