கந்தகார் விமான நிலையத்தின் மீது தலிபான்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்நாட்டின் முக்கிய நகரமாக திகழும் கந்தகார் மீது தலிபான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கந்தகார் விமான நிலையத்தின் மீது 3 ஏவுகணைகள் வீசப்பட்டது. இதில், 2 ஏவுகணைகள் விமான நிலைய ஓடு பாதையில் விழுந்து வெடித்து சிதிறன.
தலிபான்களின் தாக்குதலை தொடர்ந்து விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வான்வழி போக்குவரத்துக்கு கந்தகார் விமான நிலையம் முக்கிய காரணியாக இருக்கும் என்பதால் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தலிபான்கள் இந்த தாக்குதலை தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post