புதிய திரைப்படம் வெளியாகி 8 வாரத்துக்குள், இணையதளங்களில் வெளியிடக் கூடாது என, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். புதிய திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்குள், எந்த தொலைக்காட்சியிலும் திரையிடக் கூடாது என்றும், தர்பார் திரைப்பட விவகாரம் குறித்து, மார்ச் 5ம் தேதி லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்த குழு அமைக்கப்படும் எனவும் டி.ராஜேந்தர் கூறினார்.
Discussion about this post