மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து அண்ணா பல்கலைக் கழகத்தினர், ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர், மோகனூர் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில், மாநில பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஆய்வு நடத்தினர். பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், முன்பு ஏதும் கால்வாய்கள், அணைகள் இருந்ததா என்பதை அறிவதற்கும் உதவிகரமாக இருக்கும் வகையில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்காக அரசு தரப்பில் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆய்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டரை ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின், நீர்நிலைப் பகுதிகளை இந்தக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
Discussion about this post