பிரான்சில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் பறக்கும் தட்டில் பறந்து வந்த படைவீரர் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்..
ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மாநகரில் நடைபெற்று வரும் தேசிய நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மணிக்கு 190 கிலோமீட்டருக்கு மேல் வேகமாக பறக்ககூடியதும், 10 நிமிடங்கள் ஓடக்கூடியதுமான ஃபிளைபோர்டு ஏர் என்ற கருவியில் படைவீரர் ஒருவர் பறந்து வந்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி, இந்த கருவியை பல்வேறு சோதனைகளுக்கு பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post